Screen Reader Access w3cW3C
Skip To Main Content
English

Directorate of Boilers

Government of Tamil Nadu

  • முகப்பு
  • எங்களைப் பற்றி
  • அறிவிப்புகள்
  • தேர்வுகள்
  • முடிவுகள்
  • ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள்
  • தகவல் அறியும் உரிமை
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • எங்களை தொடர்பு கொள்ள
  • வரைபட விவரங்கள்

எங்களைப் பற்றி

கொதிகலன்களின் பாதுகாப்பான செயல்பாட்டிற்காகவும், பொதுமக்களின் மற்றும் பொதுச்சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், கொதிகலன்கள் சட்டம் 1923-ஐ நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பெற்ற அரசு அலுவலகம், தமிழ்நாடு கொதிகலன்கள் இயக்குநரகம் ஆகும். இது கொதிகலன்கள் இயக்குநரால் கொதிகலன்கள் துணை இயக்குநர்கள் மற்றும் முதுநிலை கொதிகலன்கள் உதவி இயக்குநர்கள் உதவியுடன் முறையே பிரதேச அளவிலும் வட்ட அளவிலும் மேற்கொள்ளப்படுகிறது.


 கொதிகலன்கள் துணை இயக்குநர்களும், முதுநிலை கொதிகலன்கள் உதவி இயக்குநர்களும், கொதிகலன்கள் இயக்குநரின் பொது கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டின் கீழ், கொதிகலன்கள் சட்டம் 1923 இன் படி தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வார்கள்.


 1923 முதல் தமிழ்நாடு மாநிலத்தில் கொதிகலன்கள் மற்றும் கொதிகலன் சார்ந்த தொழிலகங்களின் வளர்ச்சியில் கொதிகலன்கள் இயக்குநரகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

.
1.
    கொதிகலன்கள் மற்றும் கொதிகலன் பாகங்கள், அடைப்பான்கள், பொருத்து பாகங்கள், வார்ப்புகள், தாக்கு வார்ப்புகள் மற்றும் மின்முனைகள் உற்பத்தி செய்யும் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், என்டிடி நிறுவனங்களுக்கும் மற்றும் கொதிகலன்கள் பழுதுபார்க்கும் / நிறுவும் நிறுவனங்களுக்கும் கொதிகலன்கள் இயக்குநர் ஒப்புதல் அளிக்கிறார்.
2.
    கொதிகலன்கள் இயக்குநர், கொதிகலன் பணியாளர்கள் விதிகள், 2011 மற்றும் கொதிகலன் இயக்கும் பொறியாளர்கள் விதிகள், 2011 இன் படி, தேர்வு வாரியத் தலைவர் என்ற முறையில், கொதிகலன் பணியாளர்கள் தேர்வையும் கொதிகலன் இயக்கும் பொறியாளர்கள் தேர்வையும் நடத்துகிறார்.
3.
    கொதிகலன்கள் இயக்குநர், மத்திய கொதிகலன் வாரியத்தில் உறுப்பினராக தமிழக அரசை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
4.
    கொதிகலன்கள் மற்றும் கொதிகலன் பாகங்களின் பாதுகாப்பான வடிவமைப்பை கொதிகலன்கள் இயக்குநர் கொதிகலன்கள் சட்டம், 1923 மற்றும் இந்திய கொதிகலன்கள் ஒழுங்குமுறை விதிகள், 1950 இன் படி உறுதிசெய்கிறார்.
5.
    கொதிகலன்கள் மற்றும் கொதிகலன் பாகங்களின் உற்பத்தி நிலை சான்றிதழ் வழங்கும் ஆய்வு அதிகாரியாக கொதிகலன்கள் இயக்குநர் பொறுப்பு வகிக்கிறார்.
6.
    தமிழ்நாட்டில் புதிய கொதிகலன்களைப் பதிவு செய்யும் பதிவு அதிகாரியாக கொதிகலன்கள் இயக்குநர் பொறுப்பு வகிக்கிறார்.
7.
    பல்வேறு வகையான பற்றவைத்தல் (வெல்டிங்) செயல்முறைகளில் பற்றவைப்பாளர் தகுதிச் சோதனையை நடத்தி, பற்றவைப்பாளருக்குச் சான்றிதழ் அளிக்கும் தகுதி அதிகாரியாக கொதிகலன்கள் இயக்குநர் பொறுப்பு வகிக்கிறார்.

      

கொதிகலன்கள் துணை இயக்குநர்கள் 465 ச.மீ-க்கு மேல் சூடேற்றும் பரப்பளவு கொண்ட கொதிகலன்களை ஆய்வு செய்வார்கள். முதுநிலை கொதிகலன்கள் உதவி இயக்குநர்கள் 465 ச.மீ. மற்றும் அதற்குக் கீழ் சூடேற்றும் பரப்பளவு கொண்ட கொதிகலன்களை ஆய்வு செய்வார்கள்.

VISITOR COUNT
451
Last Updated: 12 Aug 2026

Contents owned and updated by Directorate of Boilers   

Web Portal Policies   

Designed & Developed by National Informatics Centre

copyright@Directorate of Boilers

tnboilerdir@tn.gov.in